கனிவு | வண்ணதாசன்

“ஆம்பூர் தர்மசங்கரய்யர் பார்த்ததையும், நான் பார்த்ததையும் வடக்கின் இளம் குறுத்துகள் பார்த்திருக்க முடியாது.”

“ஒப்புக்கொள்கிறேன், இந்த டில்லிச் சிறுமி பார்க்கிறதை உங்களைப் போன்ற பேர்கள் பார்த்திருக்கவும் அதே நேரத்தில் முடியாது.”

பெரிய ஆயான் வெகு காலத்திற்குப் பின் கடகடவென்று சிரித்தார்; “ஒப்புக்கொள்கிறேன்!” என்றார்.

“தர்க்கம் செய்யாமல் ஒப்புக்கொண்டால் எப்படி?” பெரிய ஆயானின் கையைத் தன் கையுடனேயே வைத்திருந்தது அந்தப் பெண். பெரிய ஆயான் மேலும் சிரித்தார்.

-கனிவு சிறுகதை

கனிவு (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் – வண்ணதாசன்
பதிப்பு – சந்தியா பதிப்பகம், சென்னை
NLBயின் முன்பதிவு செய்ய – Kan̲ivu / Vaṇṇatācan̲.
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – (connemara.tnopac.gov.in தளம் திறக்கவில்லை. தமிழக நூலக தளம் திறந்தால்தான் ஆச்சரியம். தமிழக அரசு நிர்வாகத்துக்குத்தான் வேறு பயனுள்ள வேலைகள் இருக்கிறதே. தமிழ் வளர்ப்பதை பிற நாடுகள் பார்த்துக்கொள்ளும். தமிழ்நாடு பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை.)
இணையத்தில் படிக்க – (பதிவின் இறுதியில் பார்க்கவும்)

kanivu1

கிறிஸ்துமஸ் விடுப்பில் அங்மோகியோ பொது நூலகம் சென்றபோது இந்த நூலை எடுத்து வந்தேன். விஷ்ணுபுரம் விருது, சாகித்திய அகாதமி விருதும் பெற்றுள்ளார் வண்ணதாசன். அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல இந்தப் பதிவை எழுதுகிறேன்.

மிக மெளிதான உணர்வுகளைச் சொல்லிச் செல்லும் சிறுகதைகளின் தொகுப்பு இது. உணர்ந்து அனுபவிக்கத் தக்க கதைகள் – பேருக்குச் சொல்லலை. காலையில் ரயிலில் ஒரு கதையை வாசித்து முடித்தவுடன், அந்த வசீகரத்தில் தொடர்ந்து பயணிக்கத் தோன்றியதே ஒழிய அடுத்த கதையைத் தொடங்க விருப்பமில்லாது போயிற்று.

மிக இலகுவான தமிழ் இவருடையது. மயில் தோகை வருடுவது போன்ற உணர்வுகளைக் கொண்ட கதைகள் இவை. கனிவு சிறுகதையில் பெரிய ஆயானும் பெரிய அய்யர் பேத்தியும் உரையாடும் கணம், அடைப்புகளைத் திறந்து கொண்டு பறக்கும் குருவிகளின் குதூகலத்தை நமக்குத் தரும்.

வேரில் பழுத்து – மனதை பாரமாக்கிய ஒரு கதை. கதையைப் வாசித்த பின் மீண்டும் இந்தக் கதையின் தலைப்பை மீண்டும் ஒரு முறைப் படித்து அந்தத் துயரத்தை ஒரு பெருமூச்சுடன் கடந்து வந்தேன்.

பற்பசைக் குழாயும் நாவல் பழங்களும் கதையில் பசங்களுடன் பட்டம் விட்டு குதூகலிக்கும் ஈஸ்வரி, நாவல் பழங்கள் வாங்கிய கவிஞரின் உணர்வுகளை விட அடர்த்தியாகத் தெரிகிறாள்.

விளிம்பில் நிற்கிறவர்கள், நீச்சல், சிறகுகள் விலாப்புறத்திலிருந்து முளைக்கின்றன, ஆலங்கட்டி மழை, சூரியன் அருகில் பறக்கிறவர்கள் என்று ஒவ்வொரு கதையிலும் கனிவான ஊற்று நீர் கசிந்து கொண்டு இருக்கிறது.

வாசிக்க வேண்டிய நூல். வாங்கவேண்டிய நூலும் கூட.

மீண்டும் ஒரு முறை வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்.

kanivu2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top