வங்கிகள் கடனுக்கு வசூலுக்கும் வட்டி கூடிய விரைவில் குறைய வாய்ப்புள்ளதால், அடுத்த ஆறு மாதங்களில் அதிக அளவு இளைஞர்கள் மோட்டர் பைக் வாங்குவார்கள் என ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
பூஸ்டன் ஆய்வு நிறுவனம் 10 ஆயிரம் பேரிடம் வாகனங்களை வாங்கும் விருப்பம் குறித்து ஆய்வை நடத்தியது. இதில் திருமணம் ஆகாத இளைஞர்கள் வங்கி வட்டி குறையும் என்று நம்புகின்றனர். இவர்கள் மோட்டார் பைக் வாங்குவதற்கு விரும்புகின்றனர். குறிப்பாக 18 முதல் 35 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் மோட்டார் பைக் வாங்க விரும்புகின்றனர்.
மோட்டார் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு எளிதாக கடன் கிடைத்தால், இவர்கள் வாகனங்களை வாங்குகின்றனர் என்று வாகன தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் எல்லா இரண்டு சக்கர வாகன நிறுவனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வில் இருந்து அடுத்து வரும் மாதங்களில் அதிக அளவு இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகும் என்று தெரியவந்துள்ளது.
source: webdunia

