நவம்பர் வாகன சந்தை செய்திகள்

நவம்பரில்தான் எத்தணை அறிவிப்புகள்
ஹோண்டா, மாருதி, ஸுஸுகி, ஹார்லி டேவிட்ஸன், ஆடி, மஹிந்திரா என்று. நேரமின்மையின் காரணமாக சில செய்திகளைப் பதிய முடியவில்லை. என்றாலும் இரு வரி செய்திகள் சில!

இது ரொம்ப அழகு அப்டின்னு கம்பனி ஊழியர்களே போற்றும்  BMWவின் 5 Series F10 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.  4சிலிண்டர் எஞ்சினுடன் எரிபொருள் சிக்கணம் மற்றும் அதிக திரண் கொண்டதாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

பஜாஜ் பல்சர் 135 படங்கள் வந்துள்ளன. முறைப்படி துவக்கம் டிசம்பர்  9ஆம் தேதி என்கிறார்கள்.

நூற்றாண்டு கண்ட Rolls Royce தன்னுடைய Ghost மாடலின் முன்னோட்டம் கண்டுள்ளது. விலை கம்மிதான் இரண்டரை கோடி! இதைப் பற்றி இன்னொரு பதிவு வருது!

ACE மாடலைப் போன்று ஒரு மினிவேன் டாடா தரப்பில் இருந்து வருவதாக உள்ளது

நவம்பர் 30 அன்று Audiயின் A8 மாடல் வெளிவந்துள்ளது. இதைப்பற்றி இன்னொரு பதிவு வருது.

வோல்ஸ்வேகன் நிறுவனம் கார் தயாரிப்பில் நம்பர் 1 பட்டத்தை டோயோடாவிடம் இருந்து பறித்துள்ளது.

நேனோ ஹைபிரிட் மாடல்களை வெளியிடப்போவதாக ரத்தன் டாடா அறிவித்திருக்கிறார்.

ஆட்டோ எக்ஸ்போ நாள் நெருங்கி வருகிறது. திருவிழாதான்!

1 thought on “நவம்பர் வாகன சந்தை செய்திகள்”

  1. Pingback: பேய் வருது – Rolls-Royce Ghost தற்போது இந்தியாவில்! « மோட்டார் சுந்தரம் பிள்ளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top