அது ஒரு கொடூரமாய் பயமுறுத்தும் டிராகன். மேலும் அது அரோல்டையும் பயமுறுத்தியது. அவன் சற்று பின்னோக்கி தள்ளி நகர்ந்து போனான்.
ஊதாக்கலர் கிரேயான் பிடித்திருந்த அவனது கை நடுங்க ஆரம்பித்தது.

அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும்
ஆசிரியர் : Crockett Johnson
மொழிமாற்றம்: கொ. மா. கோ. இளங்கோ
பதிப்பு: Books For Children, சென்னை – முதல் பதிப்பு ஜனவரி 2016
NLB முன்பதிவு | கன்னிமாரா முன்பதிவு (காணோம்!) | இணையத்தில் படிக்க
அரோல்ட் ஊதாக் கலர் கிரேயான வெச்சு என்ன பன்னான்னு உங்களுக்குத் தெரியுமா?
அது சாதாரண கிரேயான் இல்ல – மந்திர கிரேயான். ஏன்னா, அத வெச்சு அவன் ஒரு நகரத்தையே உருவாக்கிட்டான். ஆனா அதுல முழுக்க ஜன்னலா இருந்திச்சி.
அரோல்டு மட்டும்தான் இந்தக் கதையில முக்கியமான கதாப்பாத்திரம்.

இது ரொம்ப குழந்தைத் தனமான கதை. எனக்கு இந்தக் கதையில கிளைமேக்ஸ் ரொம்ப பிடிச்சிச்சு.
கொ.மா.கோ இளங்கோ தமிழில் நன்றாக மொழிபெயர்த்து இருக்கார்.


https://polldaddy.com/js/rating/rating.jsசுவாரஸ்யமாக உள்ளது நூலை பற்றிய இக்குறிப்பு. என் மகனுக்கு இந்நூலை வாங்கி சேகரிக்கப் போகிறேன். குழந்தை நூல்களின் பட்டியல் ஒன்றை முன்பு இணையத்தில் கண்டேன் (ஜெயமோகன் தளம் வழியாக). அதன் சுட்டி https://docs.google.com/spreadsheets/d/15d8ucuDLa_MX1VEc1KRfVGmEZbfQNnRBXCBW3_mtYZ0/
இன்னும் சில நூல் பட்டியலின் சுட்டிகள் இந்த வலை பக்கத்தில் உள்ளன.
https://www.jeyamohan.in/102838
வணக்கம் திரு சிவசங்கரன். பின்னூட்டத்தில் தந்த சுட்டிகளுக்கு நன்றி. பயனுள்ளவை. வருகைக்கு நன்றி.