நான்கு சகோதரர்களும் செல்வமும்

ஒரு காலத்தில் பீமா, அர்ஜுன், பாபு, சுரேஷ் என்று நான்கு சகோதரர்களும் செல்வம் என்கிற பணக்காரப் பையனும் இருந்தார்கள். அந்த நான்கு சகோதரர்களும் ரொம்ப ஏழை. செல்வம் அவர்களைப் பார்க்கும்போது “ஏய் ஏழைப் பசங்களா, நில்லுங்கள். என் கிட்ட பணம் உள்ளது. உங்ககிட்ட பணம் இல்லை” என்று சொல்வான்.

கல்லூரியில் அந்த நான்கு சகோதரர்களும் முதல் இடமட் பிடித்து 4000 பரிசு வாங்கினார்கள். செல்வம் படிக்காமல் பதினோராவதுஇடம் பிடித்து, காசு வாங்காமல் அப்பா அம்மாகிட்ட நல்லா அடி வாங்கினான்.

அந்த நான்கு சகோதரர்களும் மிக பெரிய விஞ்ஞானி ஆகி, ஒரு நாள் அண்டார்டிகாவிற்கு தங்கக் கப்பல் கண்டு பிடிக்கப் போனார்கள். மோசமான பனிப் புயல் அடித்தது. அப்போது பாபு ‘அங்கே ஒரு குகை தெரிகிறது. என்னைத் தொடருங்கள்’ என்று சொன்னான். அதிகமான பனிப் புயலில் அவர்கள் இருந்தார்கள்.

கொஞ்ச நாளில் விஞ்ஞானிகள் இறந்து ஆவியாகி நம்ப ஊரில் நம்ப வேலை செய்தார்கள். ஒரு நாள் கடவுள் அந்த ஆவிகளை சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போக வந்தார். மக்கள் “வேண்டாம் வேண்டாம் கடவுளே” என்றார்கள். கடவுள் அடம் பிடித்துக் கூட்டிக்கொண்டு போயிட்டார்.

4 friends - PIC (C) JammerLea
4 friends – PIC (C) JammerLea

அந்த  நான்கு சகோதரர்களும் கடவுள் கிட்ட “எங்களை எங்கே கூட்டிட்டுச் செல்கிறீர்கள்” என்று கேட்டார்கள். கடவுள் “சொர்க்கத்துக்கு” என்று சொன்னார். “நரகத்துக்குக் கூட்டிச் சொல்லுங்கள்” என்று என்றார்கள் சகோதரர்கள். கடவுள் “சரி” என்றார். சிறிது நேரம் கழித்து நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு அவர்களின் நண்பன் செல்வம் இருந்தான். அவன் பக்கத்தில் போய் “எப்படி நீ இங்கே வந்தாய்?” என்றார்கள். “ஒரு நாள் கடைக்குச் செல்லும் போது ஒரு லாரி வந்து இடித்துவிட்டது” என்றான்.

நான்கு சகோதரர்கள் கடவுளிடம் “செல்வத்தை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். திரும்ப தப்பு செய்தால் நரகத்திலேயே செல்வத்தைப் போட்டுடுங்க. அப்ப நான் எதுவும்  சொல்லமாட்டேன்” என்றார்கள்.

கடவுள் “சரி பார்ப்போம்” என்றார்.

— உனக்கு யாராவது கெட்டது செய்தால் அதை மறந்து விடு. அதை மறந்திட்டுத் திரும்பி நல்லது செய். யாராவது உனக்கு நல்லது செய்தால் அதை மறக்கவே மறக்காதே.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
-குறள்

kannan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top