கடந்த மாதம், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடல் வழி மற்றும் தரை வழி (ரயில் மார்க்கம்) சரக்குப் போக்குவரத்து துவக்கப்பட்டது. முதல் சரக்கு ரயில் தென்மேற்கு சீனாவின் யூனான் மாகாணத்திலிருந்து, கராச்சிக்கு முதல் ரயில் புறப்பட்டது. 500 டன் அளவுள்ள சரக்கு யூனான் தலைநகரம் குன்மிங்கிலிருந்து, துறைமுக நகரான குவாங் சௌ வரை ரயிலிலும் பிறகு அங்கிருந்து கராச்சிக்கு கப்பலிலும் சரக்குகள் போகும்.

இந்த வழி, உள்ளுர் வியாபாரத்தை உலக சந்தையுடன் இணைக்க உதவுகிறது என்று New Silk Road Yunnan Limited தெரிவித்துள்ளது. இந்த சேவை, வழக்கமாக ஆகும் சரக்குக் கட்டணத்தை பாதியாகக் குறைக்கிறது.
இந்தச் சேவை, சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (China-Pakistan Economic Corridor project (CPEC))த் திட்டத்தின் நீட்சி என்று சொல்கிறார்கள். பாகிஸ்தானும் சைனாவும் CPECயின் கீழ், அக்டோபரில் வர்த்தகத்தைத் தொடங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் ஹன்ஸாவிலுள்ள சுஸ்த் துறைமுகத்திற்கு வந்தன. அந்தக் கொள்கலன்கள், குவதாருக்கு அனுப்பப் பட்டன.

CPEC என்பது 3000 கிலோமீட்டர் அளவிலான, சாலை, ரயில் மற்றும் குழாய் வழி வலைப் பின்னல். இதனைக் கொண்டு, சமையல் வாயுவிலிருந்து, சர்க்கரை மூட்டை வரை கொண்டு போக இயலும். பெட்ரோல் முதல் பெருங்காயம் வரை கொண்டு போக இயலும். அன்னக் கரண்டி முதல் ஆட்டம் பாம் வரை கொண்டு போக இயலும். 46 பில்லியன் அமெரிக்க வெள்ளி மதிப்புள்ள முதலீடு. இந்த CPEC ஐக் கொண்டு, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள 3 பில்லியன் மக்களுக்கு சரக்கு அனுப்பலாம் என்று திட்டமிடுகிறது சீனா.

ஸ்பீக்கர் பிஞ்சு போல டிரான்சிஸ்டரில் இந்த செய்தியைக் கேட்டுவிட்டு வந்த செவிடன் ரங்கன் கூவினான்

தனி டமிள் நாடு வேண்டும்
பிரபாகரன் போட்டோ பார்த்தால் எனக்கு டமிள் வெறி ஏறுகிறது.
இளைஞனே பொங்கி எலு
இந்தியா ஒரு நாடே இல்லை தோழர்.
ராவணன் சீதையை ராக்கெட்டில் வைத்து கடத்தினான்..
விதுரன் போர் காட்சியை வீடியோ கான்பிரன்ஸ் கொண்டு விவரித்தான்.
விஸ்வரூபம் 2 வெளி வந்தால் இருபத்தி ஏழரை சங்கமும் எதிர்க்கும். அப்பன் மகள் கூட பார்க்காமல் வசவு பாடும்.
காஷ்மீர் பிரச்சினைக்குக் காரணம் காரட் அல்வா.
Lovely! என்றாள் பாரதத்தாள்!

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் அன்பர்களே, பதிவர்களே!

Pingback: லண்டனில் பருப்பு விற்கும் டிராகன் « கடைசி பெஞ்ச்