பேய் கதைகளும் தேவதைக் கதைகளும் – ஜெயமோகன்

சின்னப் பெண்ணாக இருந்தபோது என் அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்னவயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லிமரத்தின் நிலாநிழல் வாசல் வழியாக உள்ளே பரப்பிய வலையில் நானும் அவளும் தனித்திருந்தோம். காற்றில் வலை அலைவுற்றது. வெகு தொலைவில் திற்பரப்பு அருவி சீறிக்கொண்டிருந்தது.

“யட்சி அழகா அம்மா?”

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் – ஜெயமோகன்

கிழக்கு பதிப்பகம் – முதல் பதிப்பு 2011

NLB முன்பதிவு  | கன்னிமாரா முன்பதிவு

image

ஆசுவாசப்படுத்திக் கொள்ள இந்த நூலை இரவல் வாங்கி வந்தேன். அடுத்து சில சீரியஸ் நாவல்களும் வரிசையில் இருப்பதால் ஒரு ஜாலிக்காக இருக்கட்டுமே என்று எடுத்து வந்தேன்.

பேய் கதைகளைப் பற்றி கதை சொல்வது அந்தக் கதைக்கே சொல்லும் துரோகம் என்பதால் அறிமுகம் ஏதும் இல்லை. ஒன்று மட்டும் உறுதி. இதில் உள்ள பத்து கதைகளையும் விட விருவிருப்பு கொண்டது ஒன்று உண்டு. அது வெண்முரசு-காண்டீபம் நாவலில் சுபத்திரையை அர்ஜுனன் அழைத்துக்கொண்டு துவாரகையை விட்டுத் தப்பிக்கும் அத்தியாயம். அதற்கு முன் இந்த 10 கதைகளுமே மிகச் சாதாரணம்!

[polldaddy poll=9320775]

3 கதைகள் இணையத்தில் வாசிக்கக் கிடக்கின்றன.

இமையோன், பாதைகள், யட்சி, ஏழுநிலைப் பந்தல் கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. ஐந்தாவது நபர் கதை படித்து வெடித்துச் சிரித்தேன்.

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் ஜெயமோகன்

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top