பின் வரும் படம் இணையத்தில் பரவலாக உலா வந்தது. சிங்கப்பூர் இந்திய சமூக இதழான தப்ளாவிலும் பிரசுரமாயுள்ளது.

வழக்கம் போல தோழர்கள் சிலுப்பிக்கொண்டு சிங்கப்பூர் அரசியல், மக்களாட்சியின் குறைகளை சிங்கப்பூர் பக்கம் வராமல் இருந்தாலும் கூட, தெரிந்தது போல அலம்பிக் கொண்டுள்ளார்கள்.
தவிர, மேற்கண்ட படத்தைப் பார்த்து தமிழன் ஏமாளி என்றும் புறம் பேச்சு வேறு. தமிழர்கள் முழு ஏமாளிகள் இல்லை தோழர்களே, இருந்தால் என்றோ உங்களை நம்பி ஆட்சியைக் கொடுத்திருப்பார்கள். உங்கள் ஊரில் உள்ள தொழிலாளிகளின் நிலைமை எப்படி உள்ளதென்று பாருங்கள். இந்த ஊரை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
50 ஆண்டு காலத்தில் பன்றிக் கொட்டில்களை அகற்றி, அங்கிருந்த மக்களை வானுயர்ந்த வீடுகளில் கவுரவமாக வாழச்செய்த பெரியவருக்கு மரியாதைகள்.
அருமையான நூலக அமைப்பை நிறுவியமைக்காகவும், அதில் நல்ல தமிழ் நூல்களை இடம் பெறச் செய்தமைக்கும் நாளை செங்காங் சமுதாய நூலகத்திற்குச் சென்று என் நன்றிகளைப் பதிவு செய்கிறேன். இந்த ஊருக்கும் எனக்கும் உண்டான உறவு அவ்வளவே.
