மார்கழி திருவிழா பராக் பராக்

மார்கழி திருவிழா ஆரம்பிக்க உள்ளது. வஸ்தாதுகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க தயாராக உள்ளனர். அட்டவணைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆக, நாமளும் கலந்து கொண்டு திருவிழாவைச் சிறப்பிக்கலாம் என்றால் சென்னை போகமுடியாத நிலை. ஓசி டிக்கட்டுகளும் பெறமுடியாத சூழல்.

ஒரு மாறுதலுக்கு நாய் பிராண்டிய கட்டாந்தரையாக உள்ள ஒலிவட்டுக்களை மாற்றலாம் என்கிற உத்வேகம் வந்தது. இதெல்லாம் மூடு சரியா இருக்கப்ப செய்தால்தான் ஆச்சு. பின்வருவனவற்றை ஐடியூன்ஸ் மூலமாக தகவிறக்கம் செய்தேன்.

ஊத்துக்காடு பாடல்கள் – மகராஜபுரம் சந்தானம்
காவடிச்சிந்து – சௌம்யா
பாரதியார் பாடல்கள் – சௌம்யா
ஜெம்ஸ் ஆப் கர்னாடிக் மியூசிக் – சஞ்சய் சுப்ரமணியன்
கர்னாடிக் வோகல் – சஞ்சய் சுப்ரமணியன்
கர்னாடிக் வோகல் – சௌம்யா
ஊத்துக்காடு பாடல்கள் – பாம்பே சகோதரிகள்

கையைப் பற்றிக் கூட்டிக் கொண்டேகினான்
பதைபதைக்குதே எந்தன் ஆவி……

பாமரனின் மார்கழி வாழ்த்துக்கள். கலைஞர்கள், அதிபர்கள் கொஞ்சமாக பேசி அதிகமாக பர்பாமன்சு கொடுக்க வேண்டுகோள் 😉

2 thoughts on “மார்கழி திருவிழா பராக் பராக்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top