ஐயா சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களை 2000த்தின் ஆரம்பத்தில் புதுகையில் சந்தித்தேன். பழக இனிமையானவர். எளிமையானவர். தன் குறை கருதாது மிகப்பெரிய பணிகளை வாழ்வின் இறுதி வரை செய்தவர். பலன்கள் எதிர்பாராது தனிநபராக பல பெங்காளி நாவல்களை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.
கடைசி பெஞ்சின் அஞ்சலி.
கிருஷ்ணமூர்த்தி – விக்கிபீடியா – http://en.wikipedia.org/wiki/Subramanian_Krishnamoorthy
அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி – http://www.jeyamohan.in/?p=61342


எனது ஆழ்ந்த இரங்கல்களும்.
எளிய மனிதர் அம்மா. தன் எளிய உருவத்திற்குச் சம்பந்தமே இல்லாத மிகப்பெரிய பணியைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்
வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி ஜெ.
அன்னாரின் குடும்பத்தினருக்கு மனம்கனிந்த இரங்கல்கள்.
அருமையான மனிதரை, சிறந்த மொழிபெயர்ப்பாளரை இழந்துவிட்டோம் எனத் தெரிகிறது. நீங்கள் அவரைச் சந்தித்திருந்ததை அஞ்சலியில் நினைவுகூர்ந்ததிற்கு நன்றி.
இவர் போன்ற சிறந்த தமிழ்மொழிச் சாதனையாளருக்கு நாம் அவருடைய வாழ்நாளில் என்ன செய்கிறோம்? அவருக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான அங்கீகாரம் கூடக் கிடைக்காமல் வாழ்ந்திருப்பார் அவர். இன்னுமொரு குடத்திலிட்ட விளக்கு.
அவர் குடும்பம் சௌகரியமாக இருக்கிறதா? மேல்விபரங்கள் ஏதும் தெரியுமா கிருஷ்ணமூர்த்தி அவர்களைப்பற்றி , அவரது குடும்பவிபரம் பற்றி? தெரிய நேர்ந்தால் பதிவிடவும்.
-ஏகாந்தன்
ஒரு வகையில் உங்களுக்கு கல்லூரி சீனியர்தான் திரு கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி. மன்னர் கல்லூரி தயாரிப்பு. பார்க்கவும். http://www.jeyamohan.in/?p=61361
புதுக்கோட்டைக்காரர்கள் யாருக்கும் அவரைப் பற்றித் தெரியாது.