வருசம் பொறந்தப்ப பதிவு போட்டது. ஒரு மாசம் பூறா நாம பதிவு போடலைங்கிறதப் பொறுக்க முடியாம என்னோடு கோடானுகோடி வாசகர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிட்டு வருவதைத் தடுப்பதற்காக இந்தப் பதிவு.
உச்சி வெயில் – செங்காங் நூலகத்தில இருந்து இரவல் வாங்கி வந்தேன். மொத்தம் நான்கு கதைகள். குறு நாவல் என்கிறார்கள். அது எல்லாம் நமக்கு ஏன்.
நாவலைப் பற்றிய முழுப் பார்வை உச்சி வெயில் பக்கத்தில் உள்ளது.
குடும்பத்தை மீறி கல்யாணம் செய்து, மனைவியைப் பிரிந்திருக்கும் நம்ப ஹீரோவை அவரு அம்மா டென்சன் பன்றாங்க பாருங்க…
“எறும்பும் ஆட்டு மந்தையும் ஒண்ணு. வரிசையா போகத் தெரியுமேயொழிய, குறுக்கே புதுசா கோடு வந்தா அதைத்தாண்டிப் போகத் தெரியாது. சுத்திச் சுத்தி வந்து சிதறிப் போயிடுத்து பாரு”
“பாவம்டா”
“இதில் பாவம் என்ன? புண்ணியம் என்ன? புத்தி இருந்தா தாண்டிப் போறது. புத்தியும் வேணும். தைர்யமும் வேணும்”.
“கோட்டைத் தாண்டிப் போனவா மட்டும் சிதறிப்போகாமலா இருக்கா…?” என்று கூறிக் கொண்டே உள்ளே போனாள் அம்மா.
————
ஆச்சா.. அடுத்து.
———
“கல்தோசை உனக்கு முன்னெல்லாம் ரொம்பப் பிடிக்கும்; இப்ப வேண்டாங்கிறியே.. ஒரு சமயம் பிடிக்கும், இன்னொரு சமயம் பிடிக்காதோ…!”
——
சாப்டவனுக்கு செறிச்ச மாதிரிதான்.
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்ஸ்
ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android




அவ்வளவு தானா…?
வணக்கம் தனபாலன் சார். இத்தினூண்டு கதை. அதுக்கு மேல சொன்னா கதையே தெரிஞ்சிடுமே. 😊
இனிமேல் மூன்று முறை மட்டுமே ஒரு நாளைக்கு…!
அப்பாடா. பசுமைப் புரட்சிக்குத் தேவையிருக்காது மன்னவா.