தடா, சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இடம் தெரியாமல் இருக்காது. சென்னைக்கு வடக்குப் பக்கமாக 2 மணிநேரம் பிரயாணம் செய்து போனால் தடாவை அடையலாம். தடா நீர்வீழ்ச்சி இளசுகள் மத்தியில் பிரசித்தி பெற்றது. சென்னை டிரக்கிங் கிளப் (http://www.chennaitrekkers.org)ல் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு சென்று ‘Save Thada’ என்று உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தினை தூய்மைப் படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 1, ஒரு நாள் பூரா அங்கு தங்கி பிளாஸ்டிக் குப்பைகள், உடைந்த பாட்டில்கள் ஏனைய குப்பைகள் என்று அனைத்தையும் கட்டி சுமார் 500 குப்பை பொதிகளை அகற்றி இருக்கிறார்கள். இவர்களை வரவேற்ற வன சரக அதிகாரிகள், உள்ளூர் பொழுது போக்கு இடத்தைத் தூய்மைப் படுத்த வந்தவர்களைப் பார்த்து அதிசயித்திருக்கின்றனர்.
[youtube=http://www.youtube.com/watch?v=4iNbUT0w7FY]
அசுத்தம் செய்யாதே என்று போர்டுகளை நட்டு வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களிலிருந்தும் இங்கு வந்து குமியும் ‘குடி’மகன்கள், அங்கே வந்து செய்யும் அட்டூழியம் அத்து மீறும் வகையில் அமைந்துள்ளதாக அங்கலாய்கின்றனர் இவர்கள். குடிப்பதும், பாட்டில்களை உடைத்து எறிவதும், குடும்பத்துடன் வரும் மக்களை வம்பிழுப்பதும் என்று சேட்டைகள் அதிகமாவதை, வனத்துறையினரிடம் புகார் அளித்ததுடன், அந்த இடத்தை ‘no alcohol zone’ என்று மாற்றும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை டிரக்கிங் கிளப் இணைய தளம் : http://www.chennaitrekkers.org
Save Tada நிகழ்வு பற்றிய இணைய தளம் : http://delicious.com/savetada

