டூர் போலாம் வாங்க

page3.heat

ஊர் சுற்றுவது என்றால் யாருக்குப் பிடிக்காமல் போகும். அதும் சைக்கிள் அல்லது பைக் பயணம் என்றால் உள்ளம் கேட்குமே மோர்!! வாலிப ஷோக்கில் நம்மூரிலும் நிறைய பேர் பைக்கில் ஊட்டி, கொடைக்கானல் போகிறார்கள். அத்தகு பயணங்கள், அதில் கிடைக்கும் அனுபவங்கள் (நல்லதோ கெட்டதோ) வாழ்வில் என்றுமே மறக்கக்கூடியதல்ல.

மணிக்கணக்கில் தனியே பைக்கில் போவது.. அய்யோ.. அது போர்.. என்று அலறுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் இரவு பவர் கட் என்று சொன்னதும் கொசு கடிக்குமே, அத்தோடு போர் அடிக்குமே என்பதால் கொச்சினில் இருந்து ஊட்டிக்கு… போய்விட்டு 2 மணிநேரத்தில் பிறகு ஊட்டியில் இருந்து கொச்சினுக்குப் பயணிக்கும் அதீத பேர்வழிகளும் உள்ளார்கள் (மோட்டார் சைக்கிள் மோகனரங்கம்!!). உலகத்தையே பைக்கில் வலம் வருபவர்கள்.. மனித உருவின் தெய்வங்கள்.

பைக் மற்றும் கார் டூரிங் பற்றி ஆங்கிலத்தில் http://www.bcmtouring.com/ என்ற தளம் உலாவுவதற்கு மற்றும் சக மோட்டார் சைக்கிள் மோகனரங்கன்களுடன் அரட்டை அடிக்க பயன்படுகிறது. தமிழில் வலைதளங்கள், வலைப்பூக்கள், குழுமங்கள் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் பின்னூட்டமிடுங்களேன்.

வெளியூர் போன ஆசாமி எங்க ஊரில் பட்ட அவஸ்தையைப் பாருங்க.! http://www.crazyguyonabike.com/doc/page/?o=RrzKj&page_id=46838&v=5U

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top