திரிபுரி முதல் கல்கத்தா வரை மின்புத்தகத்திற்கான தொடுப்பை இணைத்திருக்கிறது இந்தப் பதிவு.
காந்திக்கும் சுபாஷ் சந்திர போசுக்கும் முப்பதுகளின் இறுதியில் ஒத்துப் போகவில்லை. சுபாஷுக்கு காந்தி மீது எக்கச்சக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும் காந்தியின் நிதானப் போக்கைப் பொறுத்துக் கொள்வது கடினமாக இருந்தது. காந்தி சுபாஷின் அவசரப் போக்கு இளைஞர்களை தவறான பாதைக்கு செலுத்திவிடும், விபரீதத்தில் கொண்டுபோய்விடும் என்று நினைத்திருக்கிறார். சுபாஷின் எண்ணங்களும் நேருவின் எண்ணங்களும் ஒத்துப் போனாலும் காந்தி முகாமிலிருந்து விலகி வேறொருவரை ஆதரிப்பது என்பது நேருவுக்கு சாத்தியமே இல்லை. நேருவே இப்படி என்றால் படேல், ராஜாஜி, […]
