அசத்தும் வாகன சந்தை

ஆட்டோ  மொபைல் சந்தை கலை கட்டுகிறது. சென்ற வருடம் சோம்பிக் கிடந்த இந்திய வாகண சந்தை இந்த வருடம் சூடுபிடித்துள்ளது.

Honda CR-V Aero Pack 4
ஹூண்டாய் நிறுவன கார் விற்பனை இந்த வருடம் 41 சதம் அதிகரித்துள்ளது. (28,301 கார்கள்). ஹோண்டா விற்பனை நான்கு மடங்காகி உள்ளது  (6909 கார்கள், அதில் 5200 சிட்டி ரகம்!). பைக் விற்பனையில் யமஹா 44 சதம் அதிகரித்துள்ளது (26,900 பைக்குகள்). இந்திய ஜாம்பவான் ஹீரோ ஹோண்டா 4 சதம் (3,54,000 பைக்குகள், வாவ்!!). பஜாஜ் மோட்டாரும் பவுண்டரி அடித்திருக்கிறது 52 சதம் அதிக விற்பனை என்று மார் தட்டியுள்ளது (2,50,000 பைக்குகள்!!).

yamaha-fz16-display
ஏற்கனவே யமஹா வெளியிட்ட FZ ரகம், R-x ரக பைக்குகள் இளசுகளைக் கொள்ளை கொண்டுள்ளது. நகர சாலைகளை ஹோண்டா யூனிகார்ன், சுசுகி அபாச்சி, பஜாஜ் பல்சர் போன்ற மின்னல் வேக பைக்குகள் ஆக்கிரமித்துள்ளன.  அத்தோடு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஹீரோ ஹோண்டாவும், 100 சிசி வண்டிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தப்போவதாக பஜாஜூம் வரிந்து கட்டிக்கொண்டுள்ளன.

அனைவருமே கோரஸாக பண்டிகை காலத்தைக் குறிப்பிடுகின்றனர். புதுபட்டாசுடன் புது கார், பைக் என்று இந்த முறை இந்தியர்கள் வானவேடிக்கை நிகழ்த்தியுள்ளனர். ஆக, சோம்பலடித்த இந்திய சந்தை தற்சமயம் வளர்ச்சி பெற்று வருகிறது.

காட்டுல மழை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top