அய்யா ஊட்ல இல்ல – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 4

ஸாங் இங்-வென் இடம் பதவியைப் பறிகொடுத்த தற்போதைய ஜனாதிபதி மா யிங்-ஜியுவைப் பற்றி ருசிகரமான தகவல் உலா வருகிறது.

திங்கள் கிழமை காலை குளிருக்கு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு பிரதமர் மாவோ ச்சி-குவோ இல்லத்திற்குப் போய் தேவுடு காத்துள்ளார் மா யிங். 5 நிமிடம் வெளியே நின்றும் பிரதமர் வரவில்லை. பிரதமரின் மனைவிதான் வந்துள்ளார். ‘அய்யாவுக்கு ஒடம்பு சொகமில்லை’ என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ‘இந்தாப்பா.. நீ போயிட்டு அப்புறமா வா’ என்பது மாதிரி உள்ளே விடாமல் துரத்திவிட்டதாகக் கூறுகிறார்கள்.

Ma Ying REUTERS Photo
Ma Ying REUTERS Photo

என்னதான் சண்டை இருந்தாலும், வீட்டுக்கு வந்த விருந்தாளிய இப்படியா அனுப்பறது.

— அடுத்த பதிவுடன் தாய்வான் தேர்தல் கோலாகலம் முடிவு பெறும் —

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top