விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனரும் பல்தொழில் முனைவோருமான ரிச்சர்ட் பிரான்ஸன் பற்றிய விறுவிறுப்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். திருச்சியில் பல்லவனில் எடுத்தால் செங்கல்பட்டு தாண்டும் முன் முடித்துவிடலாம். பக்கங்களின் எண்ணிக்கையும் அப்படி (200), உள்ளே உள்ள விருவிருப்பும் அப்படி.
ரிச்சர்ட் பிரான்ஸன் – என். சொக்கன்
சிக்ஸ்த் சென்ஸ், 2013
NLBயில் முன்பதிவு செய்ய – Riccarṭ pirān̲san̲ / En̲. Cokkan̲.
கன்னிமாரா முன்பதிவு செய்ய – காணோம்!
பிரிவு: புனைவல்லாதவை, வாழ்க்கை வரலாறு, மார்க்கெட்டிங்
உலகம் ஒரே மாதிரியான மனிதர்களால் ஆவதில்லை. படிக்காவதன் பெறும் புகழை படித்தவன் பெறுவதில்லை. சாதிப்பது என்பது மனிதர்களின் ஆளுமையைப் பொறுத்தது என்பதை பொட்டில் அடித்தது மாதிரி சொல்வதுதான் பிரான்ஸனின் வாழ்க்கையும், இந்த புத்தகமும்.
மிகச் சுவையாக சொல்லிச் சொல்கிறார் என் சொக்கன். அவரது எளிமையான மொழி நடை இந்த புத்தகத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்.
இந்தப் புத்தகத்தை நினைத்தவுடன் எந்த கட்டுரை நினைவிற்கு வருகிறது என்று ஒரு கேள்வி கேட்டுப் பார்த்தேன். பிரிட்டிஷ் ஏர்வேஸ் வழக்குதான் நினைவிற்கு வருகிறது. ரத்தினச் சுருக்கமான சுவையான வழக்கு. வழக்கு போட்டு பணம் பார்க்கும் ஒரு ஊரில் அரசு எந்திர ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு எதிராக வழக்கு போட்டு ஜெயிக்க காரணம் மட்டும் பொதாது. strategy என்பது எவ்வளவு முக்கியம்?
இன்னுமொரு சுவையான பதிவில் சந்திப்போம் நண்பர்களே!
வாழ்க பாரதம்


