பழைய காங்கிரஸ் அரசின் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல், அவரது காலத்தில் எடுத்த பல முடிவுகளைக் கேள்வி கேட்டு பிரஷாந்த் பூஷன் தொடுத்திருந்த பொது நல வழக்கில் நீதிமன்றம் சிபிஐ யிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளது. ‘அப்படி ஏதும் வழக்கு நடக்குதா? விசாரணை செய்றியளா?’ என்கிற கேள்விக்கு ‘ஆமாமா’ என்று பதிலளித்துள்ளது சிபிஐ.

அப்படி பூஷனின் மனுவில் என்ன இருந்தது?
- நிக்கவே முடியாதவனுக்கு முப்பத்தெட்டு பொண்டாட்டி மாதிரி, ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருந்த ஏர் இந்தியாவிற்கு 700000000000 (எழுபதாயிரம் கோடி) ரூபாய்க்கு 111 புது ஏரோப்பிளேன்கள் வாங்கியது.
- காண்ட்ராக்டுக்கு எடுக்கப்பட்ட விமானங்கள்
- இலாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்குத் தாரை வார்த்தது
- ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்சை இணைத்தது (இத என்னாத்துக்கு பண்ணாங்கன்னே தெரியலை. இன்று வரைக்கும் இரு கம்பெனிகளுக்கும் ஒரு code share கூட கிடையாது)
Here is a video chanting Praful’s name!
அப்போதைக்கு ‘பொதுத் தணிக்கைக் குழு பாத்திட்டு இருக்காங்க. கொஞ்சம் கம்முன்னு இருங்க’ அப்டின்னு அப்போதைக்கு கோர்ட் சொல்லி விட்டது. பார்ப்போம்.
http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/File-in-2-weeks-report-on-Praful-Patels-decisions-involving-Air-India-SC-tells-CBI/articleshow/46941630.cms
தொடர்புள்ள பிற ஏர் இந்தியா கட்டுரைகள் –
- கோடை கால பயணமும் விமான அரசியலும்
- ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்
- பீப்பி – சாய்னா – ஏர் இந்தியா
வெல்க பாரதம்

