குழந்தைகளுக்கான இரண்டு நூல்களை அறிமுகப்படுத்துவதில் கடைசி பெஞ்ச் அர்ப்பாட்டமும் ஆணவமும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடைகிறது.
My Mother’s Sari
எங்க பேட்டை நூலகத்தில் Just returned பிரிவில் பொதுவாக விதவிதமான ஆங்கிலப்புத்தகங்கள் இருக்கும். நமக்கும் ஆங்கிலத்திற்கும் உள்ள உறவை நம்மிடம் ஆங்கிலம் பேசும் எவரும் அறிந்து கொள்ளமுடியும். இந்த காரணத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. என்னவோ இந்திய ஆசிரியர் போன்று தெரிகிறதே என்று ஒரு குழந்தைகள் புத்தகத்தை எடுத்தப் பார்க்கையில், உடனே புன்னகையை வரவழைத்தது. கண்ணனிடம் காட்டுவதற்காக உடனே இரவல் வாங்கிக் கொண்டேன்.
கீழே தரப்பட்டிருக்கும் அசைபடம் அந்த நூலை பிரமாதமாக அறிமுகப் படுத்துகிறது. எனவே நான் அதைப்பற்றி ஏதும் சொல்லப் போவதில்லை.
https://www.youtube.com/watch?v=l6ZFGK4ghII&feature=youtu.be
மேல் விபரத்திற்கு – http://www.nlb.gov.sg/kidsread/?page_id=211
டப்பாம்பூச்சி
இந்த வருடம் இத்தணை குழந்தை புத்தகங்களை அறிமுகப்படுத்தியே தீறுவேன் என என் சொக்கன் தொடை தட்டி கிளம்பியிருக்கிறார். அதன் முதல் வெளியீடு டப்பாம்பூச்சி. பார்க்க – https://nchokkan.wordpress.com/2015/01/29/kidseb01/
இன்னமும் தொழில் ரீதியான படங்கள் இருந்தால் இந்த நூல் மேலே உள்ள மதர்ஸ் சாரி நூலை அள்ளி சாப்பிட்டுவிடும். திரு சொக்கன் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்..
சரி என்ன கதைக்களம் – எளிமையானதுதான். பட்டாம்பூச்சியும் தேனீயும் சந்தித்துக்கொள்கின்றன. அவற்றுக்கிடையேயான எளிய உரையாடல்கள் அறிவார்ந்த செய்திகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும். இறுதியில் குழந்தைகளின் சொல் களஞ்சியத்திற்கான புதிர்கள் உள்ளன.


