ராஜேந்திர சோழன் 1000 – குடவாயில் பாலசுப்ரமணியன், பாலகுமாரன், தனவேல் ஒலி-ஒளிப்பதிவு

ராஜேந்திரசோழன் முடிசூடி 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா நடத்தினர். அந்த விழாவை ராஜேந்திரன் வென்ற நாடுகளிலெல்லாம் நடத்தவேண்டும் என்கிற விருப்பத்தில், சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மையத்தில் இன்று இந்த விழா நடந்தது.

எதேச்சையாக ஓவியர் மாருதி இன்றைக்கு சோழனின் கடற்படை ஓவியத்தை facebookல் பகிர்ந்திருந்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து….

தமிழகத்தில் இருந்து மூவர் வந்திருந்தனர்.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் – இன்றைய விழாவில் ராஜேந்திர சோழனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்றவர் என்று நான் உறுதியாகக் கூற இயலும். அவருடைய ஒளிப்பதிவு கீழே. ஒரு சிலையைப் பற்றியே அவரால் அரை மணிநேரம் பேச முடியும். அவரைப்போய் ஒட்டு மொத்த கங்கைகொண்ட சோழபுரத்தை அரைமணியில் சொல்லச்சொன்னால் எப்படி. கட கடவென ஓடியிருப்பார்.

நிறைவாக எழுத்தாளர் பாலகுமாரன் (பெரும்பாலும் தன்னுடைய உடையார் நாவல் பற்றியே பேசினார்). ஒலிப்பதிவு கீழே.

 

திரு தனவேல் ஐஏஎஸ் – ஒலிப்பதிவு கீழே. நன்றாகவே பேசினார்

1 thought on “ராஜேந்திர சோழன் 1000 – குடவாயில் பாலசுப்ரமணியன், பாலகுமாரன், தனவேல் ஒலி-ஒளிப்பதிவு”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top