ஹார்லி டேவிட்ஸன் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகப் போகும் செய்தி நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே அவர்கள் அறிவித்தபடி பிராண்டு அறிமுக முகாம்களை நடத்தத் துவங்கிவிட்டனர்.
மும்பையில் நடந்த இத்தகு முகாம் 3மணி நேரம் நீடித்ததாம். ஹார்லி டேவிட்ஸன் பிராண்டு, கம்பெனி மற்றும் அவர்களின் பைக் கொலு என்று கலை கட்டியிருக்கிறது. அத்துடன் இந்திய ஹார்லி டேவிட்ஸன் ஊழியர்களுடன் உரையாடிக் களித்து, அவர்கள் அளித்த மோட்டார் சைக்கிளில் ஒரு ரவுண்டு போய் திரும்பியிருக்கிறார்கள் team-bhp மக்கள்!
இந்திய பைக் ரசிகர்களை வரவேற்றவர்கள்
ரக வாரியான பைக்குகள் பார்வை
ஐந்து ரகங்கள் இருக்கின்றனவாம்.
- Sportster
- Dyna
- Softail
- Touring
- VRSC
மொத்தமாக 4 எஞ்சின்கள் வைத்திருக்கின்றனர். இதில் டைனாவும் டூரிங் மாடலும் ஒரே எஞ்சினைக் கொண்டதாம். ஆறாவது ரகமாக CVO, Customized Vehicle Operations என்று அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
Sportster
ஹார்லி வகைகளில் இது சல்லிசாக கிடைக்கக்கூடிய சிறிய ரக எஞ்சின் கொண்ட மோட்டார் சைக்கிள். இது 883 சிசி ‘தானாம்’.
இதன் எஞ்சினில் 3 ரப்பர் பிடிமானம் கொடுத்திருக்கிறார்கள். V-Twin டிசைன் உடைய அதிர்வைக் குறைப்பதற்காக.
இந்தியாவில் 7 லகரம் வரலாம்
Dyna
இங்கே street bob என்ற மாடல் காட்டியுள்ளார்கள்
Bob அப்டின்னா, சும்மா இருக்க முடியாம வேகத்தைக் குறைக்கிறேன், மைலேஜ் அதிகமாக்கப்போறேன் அப்டின்னு பைக்குக்குள்ள கடப்பாறை திருப்புளியோட போறவங்களாம்!
இந்த எஞ்சின் 1573சிசியாம்!!
ஹார்லி டேவிட்சனுடன் 1983ல் இருந்து டன்லப் பார்ட்னராக இருந்து வருகிறது. பல்வேறு சைஸ் மற்றும் தேவையின் காரணமாக மெக்ளின் கூடவும் கைகோர்த்திருக்கிறது HD. மெக்ளின் கைவண்ணம் இந்த வகைபைக்கில் மாத்திரம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஹார்லி மக்கள் பலபேருக்கு இந்த பைக் பிடித்தமானதாக உள்ளதாம்
Softail
இங்கே காட்டப்பட்டுள்ள மாடல் Heritage Classic Softail
இந்த எஞ்சினும் 1573சிசியாம்!!
இதோட திரை மற்றும் பில்லியன் சீட்டை நிமிசத்தில கழட்டி தூக்கிப் போட்டுடலாமாம்.
Touring
Road King மற்றும் Ultra Classic Electra Glide என்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இங்கே காட்டப்பட்டுள்ளன.
HD பட்டறையில் பெரிய பைக் இதானாம்!
நெடுஞ்சாலையில் நெடிய தூரம் போவதற்கு அஞ்சாத குதிரை இது
VSRC / V-Twin Racing Street Custom
Night Rod Special என்ற மாடல் காட்டப்பட்டுள்ளது. இத்துடன் V-Rod, V-Rod Muscle என்று மூன்று மாடல்கள் இதில் உள்ளன.
~125hp மற்றும் 9000rpm (ஒப்பீடுக்கு ஹீரோ ஹோண்டா CBZ 14hp, 8200 rpm)
ஹார்லி பட்டரையின் water cooled பைக்!
(இந்த பைக்கில யாரையும் டிரையல் பாக்க விடலையாம்!)
இந்திய ஹார்லி டேவின்ஸன் நிர்வாக இயக்குநர் அனூப் பிரகாஷிடம் மக்கள் பேசியிருக்கிறார்கள் அவர் சொன்னதான இவர்கள் சொல்லுவது
பைக் விலைகள் 2010 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்படும்.
அனைத்து பைக்குகளும் அசெம்பிள் செய்தே இறக்குமதி செய்யப்படும். தற்சமயம் உள்நாட்டு கட்டமைப்பு இல்லை.
2010 மாடல்களில் 12 முதல் 15 பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
ஹார்லி மக்கள் நெடுநாளைய திட்டத்துடன் இந்தியா வந்துள்ளனர்.
இந்தியாவிற்காக குறைந்த விலையில் பைக் என்ற திட்டம் இல்லை!!!
யாராவது தமிழ் மக்கள் இது போன்ற முகாமிற்குச் செல்ல நேர்ந்தால் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
