Small Car from Hyundai

நேற்று நான் சொன்னது போல,இந்த கார்காலத்தில் இது சிறிய கார் காலம். புரியலையா. மழை காலம் தொடங்கியதும் சிறிய கார்கள் பற்றிய செய்திகளா வந்து குமிகிறது. வாழ்க.
இன்று ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சிஈஓ தன் பங்கிற்கு குட்டி கார் மேளாவில் இணைந்திருக்கிறார். லாபத்தை அதிகரிக்க சிறிய ரக கார்களின் தயாரிப்பை தொடங்க நினைப்பதாக பேட்டி அளித்திருக்கிறார்.

அத்தோடு 2010ஆம் ஆண்டிற்குள் டீசல் எஞ்சின் தயாரிக்கும் தொழிற்கூடம் சென்னையில் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

நடுத்தர மக்களிடையே எப்படியும் ஆதரவைப் பெறுவார்கள். பார்க்கலாம் அந்தக் காலம் எப்படி இருக்கிறதென்று!

அத்தோடு இந்திய ஃபியட் நிறுவனம் இயற்கை எரிவாயுவில் (compressed natural gas – cng) கார்களை அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top